முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன்


            சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன்களை வழங்குவார் என்பதை விளக்கும் இந்த பதிவை பார்வையிடும் அனைவருக்கும் வணக்கங்கள் பல.

             சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் (லக்கினத்தில் ) நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் நல்லது . நட்பு வீடாக இருந்தாலும் நல்லது வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்க்கு நல்லது செய்வார். சிற்றின்ப சுகம் நன்றாக அமையும். பந்தயத்தில் வெற்றி மற்றும் திடீர் பணவரவு இருக்கும்.

            2-ல் சந்திரன் செல்வம் தருவார். நன்றாக பேச்சு வரும் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும் சொத்து சுகம் ஏற்படும். பெயரும் புகழும் உண்டாகக் காரணமாக இருப்பார். நல்ல கல்வி கிடைக்கும் சந்திரன் கெட்டால் செல்வத்தை இழக்க செய்யும். நல்ல பணவரவு இருக்காது. பொதுவாக வளர்பிறை சந்திரன் நல்லது செய்வார்.

               3-ல் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் உடல் வலிமையையும் ஆற்றலையும் தருவார். சகோதர சகோதரிகளை ஆதரிப்பார் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.         

மூன்றாவது வீடாக இருப்பதால் அடிக்கடி குறுகிய பயணம்  செய்ய வைப்பார். வாகனம் வசதி கிடைக்கும் சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.
 
    
        4-ல் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும் 4 ஆம் வீடு வீட்டை குறிப்பதால் ஆறு குளம் கடலோரத்தில் வீடு அமையும். நண்பர்களுக்கு உதவி செய்வார். தாய்வழிச்சொத்து கிடைக்கும் கொடை குணம் இருக்கும்.

       5-ல் சந்திரன் பலம் பெற்று இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும். நல்ல அறிவாற்றலை தருவார் வாழ்க்கையில் உயர்ந்த நிலைய அடையவைப்பார். குழந்தைபாக்கியம் அமையும் ஆனால் பெண் குழந்தைகளே பிறக்கும். சந்திரன் கெட்டால் அனைத்தும் எதிர்மறையாக இருக்கும்.

             6-ல் சந்திரன் இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்பவர். விரோதிகளை உண்டு பண்னுவார். இளம் வயதில் மகிழ்ச்சி குறையும். சந்திரன் அசுபபலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

              7ல் இருந்தால் அழகான மனைவி அமைவார் நல்ல நடத்தையை உண்டாகும்
               8ல்  இருந்தால் அது மறைவு ஸ்தானத்தில் உள்ளது போல்தான் பலனை வழங்குவார்

                9-ல் உள்ள சந்திரன் இருந்தால் நல்ல பாக்கியசாலியாக இருப்பார். புத்திரபாக்கியம் இருக்கும். உறவினர்கள் நல்ல உதவி செய்வார்கள். செல்வம் குவியும். சங்கீதம் நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாகும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்.

             10-ல் உள்ள சந்திரன் தன் மதத்தின் மீது பற்று ஏற்பட்டு மதம் பிரசாரம் செய்வார். நல்ல செல்வ வளம் சந்திரன் தருவார். வாழ்க்கையில் உன்னதமான பல நல்ல காரியங்களை செய்வார். செய்தொழில்களில் பகைவர்களை வெற்றிக்கொள்ளும் தைரியத்தை தருவார்.

வாழ்க்கையில் பற்றிய எண்ணத்தை இயற்கையாக உண்டுபண்னுவார். தாய்வழியில் நல்லது செய்வார். நண்பர்களிடத்தில் நல்ல நட்பு உண்டுபண்னுவார். தொழில் நுட்பத்துறையில் ஈடுபட வைக்கும். தொழில்நுட்பத்துறையில் நல்ல அறிவு வளர செய்வார். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் நல்ல வசதி வாய்ப்பு கிடைக்கும். சிலபேருக்கு அரசாங்கத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

           11-ல் உள்ள சந்திரன் மூத்த சகோதர்களின் மூலம் லாபத்தை தருவார். எந்த வேலையை எடுத்தாலும் எளிதில் முடிக்க கூடிய திறமையை தருவார். நல்ல தீர்க்காயுள் ஏற்படும். வேலையாட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மீது ஆர்வம் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நல்ல செல்வ வளம் சேரும்.

              12-ல் உள்ள சந்திரன்  பாதங்களில் வலி உண்டாக செய்வான். வாழ்க்கையில் மதிப்பு இழக்க செய்வான். கண் பார்வை மங்க செய்வான். அறிவாற்றல் குறையும். குறுகிய மனப்பான்மை இருக்கும். மனஉளைச்சல் இருக்கும். செலவு கூடும். கண் நோய்கள் ஏற்படலாம். ஜாதகன் சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!

                    பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான் துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும் சிலர் படு கருமியாக இருப்பார்கள். 
      
              மேலே குறிப்பிட்ட இந்த பலன்கள் சந்திரன் நின்ற வீட்டுக்கு உரியவர் பார்வை சேர்க்கை ஆகியவற்றை கொண்டு மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


நன்றி ..மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது                      ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்.  இரண்டில் கேது!                        ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...

கிரகங்கள் அமர்ந்த இடப்பலன்கள்

சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த ...

ஆலய அமைப்பும் அறிவியலும்

"  ஆலயங்களில் அமைப்புகள்         மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது.  உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.  வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்ற...