முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோதிடத்தில் மறைவுஸ்தானமும் திடீர் யோகங்களும்

உங்கள் ஜாதகப்படி திடீர் பணவரவு எப்போது கிடைக்கும்?
மறைவு ஸ்தானம் தீமையை மட்டும் தான் செய்யுமா?
பொதுவாக ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என்பது ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகம் ஆகும். மறைவு ஸ்தானங்களின் திசா மற்றும் புத்தி நடக்கும் போது கெடுதல் மட்டுமே நிகழும் என்பது பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு கூற்றாகும்.

உண்மையில் மறைவு ஸ்தானம் என குறிப்பிடப்படும் ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் பாவகத்திற்கும், லக்னம் முதல் 12 பாவகத்திற்கும் இரண்டு விதமான குணங்கள் உள்ளன : அவை

1. சுபர்களின் சேர்க்கை மற்றும் பார்வை
2. அதிபதிகள் பெறும் பலம்

சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள் நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று பலனை நடத்தினால் நன்மையை தரும்.

மறைவு ஸ்தானங்கள் திசையில் ஒரு மனிதன் முழுமை அடைகிறான். அவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்ப காலங்களில் மனதில் உண்டாகும் தைரியம், போராடும் குணம் மற்றும் தனக்கு ஆதரவானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் ஏட்டுக்கல்வியை விட அனுபவ கல்வியே சிறந்தது. ஆனால், அதற்கு நாம் அளிக்கும் விலையோ சற்று அதிகமானது.

ஆனாலும், மறைவு ஸ்தானங்கள் திசையில் தீமையே நடக்கும் என்று கூறவும் இயலாது. எல்லாம் நாம் செய்த வினைகளின் அடிப்படையை பொறுத்தே உள்ளது. மறைவு ஸ்தானங்களின் திசைகளில் நன்மைகளும் உண்டாகும். அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து, இதன் அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி பார்ப்போம்.

ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திசை முழுவதும் சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்றுக்கொண்டே இருப்பார்.

உடலில் ஏற்படும் உடல்நல குறைவுகள் விரைவில் குணமாகும்.

கடன் பெறுவதாலும், கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார். எதிரிகளின் சொத்து ஜாதகருக்கு கிடைக்கும்.

எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை உண்டாகும், எதிரிகளின் செயல்பாடுகள் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும், ஜாதகரை எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழிலில் முன்னேற்றம் என்பது மிக விரைவானதாக இருக்கும்.

ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள இயலாத அளவில் இருக்கும்.

தனது தாய்மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம் உண்டாகும்.

எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

திடீர் அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும். லாட்டரி, புதையல் போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் பெறுவார்.

குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு வருமான வாய்ப்புகளை பெறுவார்.

மேலும் திடீர் பொருள் வரவும், சொத்து சேர்க்கையும், எதிர்பாராத பண வரவும் நிச்சயம் ஏற்படும்.

பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகர் செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும்.

தொழில், நிலம், நகை மற்றும் வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதால் எதிர்பாராத செல்வாக்கு மற்றும் பண வரவு கிடைக்கும்.

ஆன்மீக வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி, இறை நிலை பற்றிய தெளிவு, தன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆற்றல், மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து கொள்ளும் சிறப்பு தகுதிகள், மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம்.

ஜாதகர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் ஆற்றல், முன்ஜென்ம நினைவுகள், கர்ம வினை பதிவின் தன்மைகள் போன்றவைகளை பெற்றிருப்பார்கள்.⭐⭐⭐⭐நன்றி⭐⭐⭐

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிரகங்கள் அமர்ந்த இடப்பலன்கள்

சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். சந்திரன் முதல் வீட்டில் இருந்தால் லக்கினத்தில் இருப்பது நல்லது ஆனால் சந்திரனுக்கு அது சொந்த ...

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள்

பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது                      ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்.  இரண்டில் கேது!                        ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...

ஆலய அமைப்பும் அறிவியலும்

"  ஆலயங்களில் அமைப்புகள்         மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது.  உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.  வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்ற...