இந்த வருடம் அக்டோபர் மாதம் வரப்போகும் குருப்பெயர்ச்சி யார் யாருக்கு நன்மைகளை வழங்கும் என்பதை அறிந்துகொள்ளமுன் பொதுவாக குருபெயர்ச்சியின் பலன்கள் எந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கு கிடைக்கும் என்று விளக்கம் அளிக்க உதவும் வகையில் இந்த கட்டுரை எழுதியுள்ளேன்.
குரு பகவான் எல்லா இராசிக்கும் நன்மையை மட்டும் தான் செய்வாரா? கெடுதலே செய்ய மாட்டாரா?
குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை தான் இருக்கும் இராசியிலிருந்து தனக்கு அடுத்த இராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்த ஒரு வருட குருப் பெயர்ச்சிக் காலத்தில் - அந்த முழு வருடமும் - தான் இடம் பெயர்ந்த இராசிக்கு நன்மையை அள்ளித தருவாரா என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழும். அதற்கு விடை நிச்சயமாக இல்லை என்றுதான் ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
உங்களின் ஜென்ம ராசியில் இருந்து 2,5,7,9 & 11 ஆகிய இராசிகளில் இருந்தால் நன்மை செய்யும் குருபகவான், பிற இடங்களான 1,3,4,6, 8,10, & 12ல் நன்மைகளை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருகிறார்.
இப்படி ஒரு வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தொடர்ந்து குருபகவான் தந்தால் அதை மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியுனா? நிச்சயமாக எவராலும் முடியாது. அதாவது ஒரு வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும். அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.
அதற்காகத் தான், இறைவன் அந்த கொடுக்கும் அளவையும் - அதாவது நன்மை, தீமை எதுவானாலும் அதை அளந்து அவரவர் கர்மவினைக்கேற்பத் தரும்படி பார்த்துக் கொண்டார்.
ஒரு வருட இராசிக்கட்டப் பயணத்தில் குருபகவான் ஏறக்குறைய ஐந்தரை மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்தப் பலனும் பாதி அளவில்தான் அது நன்மையோ அல்லது தீமையோ நம்மை வந்தடையும்.
எனவே, பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குருவக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுப காரியங்களைச் செய்துவிட வேண்டும்.
அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப்பெயர்ச்சி நன்மை தரும்.மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய அளவில் நன்மை ஏதும் தராது. இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப்பெயர்ச்சி நன்மை தரும்.மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய அளவில் நன்மை ஏதும் தராது. இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, குரு இராசிக்கு நல்ல நிலையில் உள்ளார். கோச்சார குரு பார்வை வந்துவிட்டது, அதனால், தாராளமாக திருமணம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் செய்யலாம் என வாய்க்கு வந்தபடி பலன் சொல்வார்கள். ஆனால், ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் நம் அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்திருப்போம். இதற்கு சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணமாகும். இதை நாம் புரிந்து கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.
6 மாதம் சாதகமும், 6 மாதம் பாதகமும் தரக்கூடிய குருப்பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
குருப்பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
குரு அருள் கொண்ட ஆலயங்களுக்கு சென்று, யாகங்கள், ஹோமங்கள் வேள்விகளுக்குத் தேவையான நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர் மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு முடிந்ததை வாங்கிக் கொடுத்து, தகுந்த சிவாச்சாரியார் மூலம் குருக்கிரக ப்ரீதி செய்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் குருபகவான் என்றென்றும் உங்களுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார்.
கருத்துகள்
கருத்துரையிடுக