வாசக அன்பர்களுக்கு வணக்கம் ,
ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக
சில நிகழ்வுகள் நம்மை சுற்றி நடக்கும் விதம் எப்போது எப்படி மாறுகிறது என்பதை சாதாரணமாக கவனிக்கும்பொது தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கு எதோ ஒரு சக்தி நம்மை கட்டுபடுத்துவது புரியும்.
இந்த புரிதலால்தான் நம்மை சுற்றும் கிரக நகர்வுகளால் ஏற்படும்மாற்றத்தினால் உண்டாகும் கதிர்விச்சுகளுக்கு ஏற்ப நமது உடல் மற்றும் மூளை செயல்பாடுகளும் மாறுவதை உணர முடியும் . இது தான்
நமது முன்னோர்கள் துல்லியமான அறிவுக்கூர்மையால் சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே நமக்கு விட்டு சென்ற ஜோதிடம் என்னும் அறிய
பொக்கிஷம்.
இந்த ஜோதிடம்தான், பிறப்பும் இறப்பும் கொண்ட வாழ்க்கை இந்த மண்ணில் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிய உதவும் விதி என்னும் ராசி சக்கரத்தில் பதிய வைத்து காட்டும் கண்ணாடி.
இந்த அடிப்படையில் ஒருவர் தனது செயல்பாட்டினை பரிசோதனை செய்ய முயர்ச்சிபதுதான் ஜோதிட சாஸ்திரத்தில் முதல் ஈடுபாடு அடைய வழிவகுக்கும்.
கூர்ந்து கவனித்தால் நமது ஜோதிட நாட்டம் அதிகரிக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான பலன்கள் லக்கினத்தில் கேது ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன். காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும். உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம் இருக்கும். மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும். இரண்டில் கேது! ஜாதகன் எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப் பாதியில் விட்ட...
கருத்துகள்
கருத்துரையிடுக